‘அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து’.. ‘பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து’.. ‘நொடிப்பொழுதில் குழந்தைகளுக்கு நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 19, 2019 07:44 PM

திருச்சியில் பள்ளி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் மற்றும் 4 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.

Trichy Driver Children Injured In School Van Private Bus Accident

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாருதி நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றின் வேன் வழக்கம்போல குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி அதிவேகத்தில் சென்ற தனியார் பேருந்து ஒன்று நொச்சியம் அருகே பள்ளி வேன் மீது திடீரென மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் பள்ளி வேனின் வலதுபகுதி முற்றிலுமாக நொறுங்கியதில் ஓட்டுநர் மற்றும் 4 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் தப்பியோடியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தை அடித்து நொறுக்கியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மணச்சநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #SCHOOLSTUDENTSTABBED #SCHOOL #VAN #BUS #CHILDREN