"மளமளவென சரிந்து விழுந்த தொடக்கப்பள்ளி!"... கதிகலங்கிப்போன 32 குழந்தைகளின் பெற்றோர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manishankar | Jan 10, 2020 10:47 AM
வால்பாறை அரசு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையின் அருகாமையில் அமைந்துள்ளது, காஞ்சமலை தேயிலைத் தோட்டம். அங்கு இயங்கி வரும் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், 32 மாணவர்கள் படித்து வருகின்றனர். 62 ஆண்டுகள் பழமையான அந்த பள்ளிக்கட்டடம் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. ஆதலால், கட்டடத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அங்கு பயிலும் மாணவர்கள், மதிய உணவுக்காக பள்ளியின் அருகாமையில் உள்ள உணவு கூடத்திற்கு நேற்று மதியம் சென்றுள்ளனர். யாரும் எதிர்பாராத விதமாக பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. குழந்தைகள் யாரும் அந்த கட்டடத்தில் இல்லாத போது இது நிகழ்ந்துள்ளது. ஆனால், பள்ளியில் இருந்த பீரோ, மேஜை, நாற்காலி போன்ற பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் மாணவர்களின் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.