'என்ன ய பண்ணான் என் கட்சிகாரன்'...'இரக்கம் இல்லையா உங்களுக்கு'...'பாம்புக்கு' வந்த சோதனை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Nov 16, 2019 04:31 PM

தற்போதைய தலைமுறையினர் பல பழமொழிகளை பொய்யாக்கி வருகிறார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடைபெற்றுள்ளது.

Children Use Enormous Dead Snake as Jumping Rope to Play in Vietnam

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. ஒரு பேச்சுக்கு பாம்பு என்று சொன்னால் கூட அலறி அடித்துக்கொண்டு ஓடுவது பலரின் வழக்கம். பாம்பு இறந்து கிடந்தால் கூட அதன் அருகில் செல்ல பலரும் தயங்குவது உண்டு. ஆனால் வியட்நாமில் இறந்த பாம்பை வைத்து சில சிறுவர், சிறுமியர் ஸ்கிப்பிங் விளையாடியது தொடர்பான வீடியோ, சமூகவலைத்தளங்களில் ஹிட் அடித்து வருகிறது.

வியட்நாமின் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில் சில சிறுவர்கள்  விளையாடுவதற்காக ஒன்று கூடியுள்ளார்கள். அப்போது அவர்களுக்கு விளையாடுவதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் பாம்பு ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டனர். ஆனால் அதை கண்டு அவர்கள் பதற்றம் அடையாமல், ''நமக்கு ஒரு ஆடு சிக்கிடுச்சு டா'' என்ற தொனியில் உற்சாகமடைந்தனர். 

இதையடுத்து இறந்த பாம்பை கையில் எடுத்த அவர்கள், கயிறுக்கு பதிலாக பாம்பின் உடலை கொண்டு ஸ்கிப்பிங் விளையாட ஆரம்பித்தனர். இறந்த பாம்பின் உடலை ஒரு சிறுவனும், சிறுமியும் பிடித்து கொள்ள, இரு முனைகளை பிடித்து சுழற்றி நடுவில் நின்றிருந்த சிறுமி உற்சாகமாக துள்ளி குதித்து ஸ்கிப்பிங் ஆடுகிறாள். இதனை அங்கிருந்த பெண் ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tags : #SNAKE #JUMPING ROPE #CHILDREN #VIETNAM #PLAYING