"நீங்க வாட்ஸ் அப் வச்சிருக்கீங்களா?"... "இனிமே பணத்தையும் வாட்ஸ் அப் பண்ணலாம் போலயே?!"... "பட்டைய கிளப்பும் வாட்ஸ் அப் நிறுவனம்!"...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Feb 01, 2020 08:15 PM

டிஜிட்டல் பேமெண்ட் முறை நாளுக்கு நாள் இந்தியாவில் வளர்ந்து கொண்டே செல்லும் நிலையில், வாட்ஸ் அப் பேமெண்ட் (WhatsApp Payment) அம்சத்தை களமிறக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளார்.

mark shares about whats app pay implementation in india

உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ் அப் பயனாளிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு முக்கிய அம்சம், வாட்ஸ் அப் பேமெண்ட் ஆகும். PayTM, PhonePe, Google Pay உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளுக்கு கடும் போட்டியாக WhatsApp Pay இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், WhatsApp Pay அம்சம், அடுத்து வரும் 6 மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்-இன் இந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அம்சம் பயன்பாட்டிற்கு வந்தால், நீங்கள் புகைப்படங்களை எளிதாகவும் விரைவாகவும் அனுப்புவது போல பணத்தை அனுப்ப முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Pay அம்சம் ஏற்கனவே பல நாடுகளில் பைலட் மோட் அடிப்படையில் சோதிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, ஒரு மில்லியன் பயனர்களுடன் இந்த சேவையை இந்தியாவில் வெற்றிகரமாக சோதனை செய்த போதிலும், டேட்டாவை சேமிப்பது தொடர்பான சிக்கல் மற்றும்  விதிமுறைகள் வாட்ஸ் அப் பே அறிமுகத்தை இந்தியாவில் தள்ளி போக செய்து வருகின்றன.

வாட்ஸ் அப் நிறுவனத்தை, கடந்த 2014 ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags : #WHATSAPPUPDATE #ZUCKERBERG #WHATSAPPPAY