'சீறிப்பாய்ந்த காளை!'... 'எதிரே குழந்தையுடன் வந்த தாய்!'... 'பொதுமக்கள் அதிர்ச்சி'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 18, 2020 02:51 PM

எதிரில் தாய் மற்றும் குழந்தை இருப்பதைப் பார்த்து, ஆவேசமாக வந்த காளை, தனது வேகத்தைக் கட்டுப்படுத்தி அவர்களை தாண்டி குதித்துச் சென்றது மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

A Bull jumps over a mother who came with her children

சிவகங்கை மாவட்டம் சிராவயலில், நேற்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. அப்போது, மஞ்சுவிரட்டில் ஆவேசமடைந்த காளை ஒன்று திடீரென சீறிப்பாய்ந்து ஓடத் தொடங்கியது. அந்த சமயத்தில், காளையின் எதிரே ஒரு தாய் குழந்தையைச் சுமந்தவாறு நடந்து வந்துகொண்டிருந்தார்.

காளை, அவர்களை முட்டி தூக்கி வீசி விடுமோ என அங்கு இருந்தவர்கள் பயந்து கொண்டிருந்த வேலையில், தாயையும் குழந்தையையும் தாண்டி குதித்துச் சென்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அன்பின் மிகுதியால், ஆவேசத்தைக் கட்டுப்படுத்திய காளை, தாயையும் குழந்தையையும் தாண்டி குதித்து ஓடிய சம்பவம், பார்பவர்களை நெகிழச் செய்துள்ளது.

Tags : #JALLIKATTU #MOTHER #CHILDREN