‘இனி ட்விட்டரிலும் இதை பண்ணலாம்’... ‘உலக அளவில் வந்த புது அப்டேட்’... ‘குஷியில் ட்விட்டர் பயனாளர்கள்’!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Sangeetha | Nov 23, 2019 11:49 PM

ஃபேஸ்புக்கில் தேவையில்லாத கமெண்ட்டுகளை மறைக்கும் வசதி உள்ளது போன்று, தற்போது ட்விட்டரிலும் புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

Twitter rolls out its Hide Replies feature to all users

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை சாதாரண மனிதர்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். சில சமயங்களில் யரேனும் குறிப்பிடும் சில கருத்துக்கள் எதிர்மறையான கமெண்ட்டுகளை கொண்டு வரும். இதனை மறைக்க ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் அதற்கான வசதிகள் உள்ளன.

இந்நிலையில், ட்விட்டரிலும் அந்த வசதியை கொண்டுவர சோதனை செய்யப்பட்டது. இந்த Hide Replies வசதி முதன்முதலில் கடந்த ஜூலை மாதம் கனடாவிலும், அடுத்தடுத்த மாதங்களில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் வெளியிடப்பட்டு சோதனை செய்யப்பட்டது.மொபைல் ஆப் மற்றும் இணையதளம் ஆகிய 2 தளங்களிலும், இந்த அப்டேட்-க்கு நல்ல ஆதரவு கிடைத்தது. இதையடுத்து தற்போது சர்வதேச அளவில், இதனை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது ட்விட்டர்.

ட்வீட்களில் உள்ள கிரே நிற ஐகானை க்ளிக் செய்து ஹைட் ரிப்ளைஸ் அம்சத்தை இயக்க முடியும். எனினும், மறைக்கப்பட்ட ரிப்ளைக்களை புதிய ஐகானை க்ளிக் செய்து, ஃபாளோயர்கள் மட்டும் பார்க்க முடியும். சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவை போலி செய்திகள் மற்றும் எதிர்மறை தகவல்கள் பரவ அதிகளவு காரணமாக மாறி வருவதை தடுக்க, ட்விட்டரில் இந்த புதிய அம்சம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #TWITTER