பழைய 'ரூட் தல'க்கு கல்யாணம்... புதிய 'ரூட் தலைகள்' செய்த காரியம் என்ன தெரியுமா..? திருமண விழாவில் பரபரப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 28, 2020 10:31 AM

சென்னை திருவேற்காடு பகுதியில் நடைபெற்ற பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தலையின் திருமண விழாவில் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

Students celebrating with a knife in a former Root Head wedding

மணமக்கள் நின்ற மேடையில் ஏறிய பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் பட்டா கத்தியை மணமகன் மற்றும் மணமகள் கையில் கொடுத்து கேக்கை வெட்ட சொல்கின்றனர். பின்னர் பட்டா கத்தியுடன் நடனமும் ஆடுகின்றனர்.

கடந்த வாரத்தில் இதே போன்று பிறந்தநாள் விழாவில் பட்டா கத்தி மூலம் கேக் வெட்டிய இருவர் கைது கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இந்நிலையில் திருமண விழாவில் பட்டா கத்தியுடன் கேக் வெட்ட தூண்டிய மாணவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #MARRIAGE