இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்1. கேரளாவில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை 176 ஆக உயர்வு. இந்தியாவில் முதலிடம்.

2. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள 11,499 கோடி ரூபாய் ஊதியத் தொகை, ஏப்ரல் 10ம் தேதிக்குள் விடுவிக்கப்படும் என மத்திய அரசு தகவல்.
3. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டார்.
4. தெலுங்கானாவில் இன்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு.
5. ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 493 பேர் உயிரிழப்பு. மேலும் 6,273 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
6. ஊரடங்கு உத்தரவால் டெல்லி உட்பட பல பகுதிகளில் காற்று மற்றும் ஒலி மாசு குறைந்துள்ளது.
7. தமிழக சிறையில் உள்ள 2,642 விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் சி.வி. சண்முகம்.
8. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு.
9. கர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
10. தமிழகத்தில் தடை உத்தரவை மீறிய 4,100 பேர் மீது வழக்கு. அரசின் நடவடிக்கைகளை கண்காணிக்க 6 ஏடிஜிபிக்கள் நியமனம்.
