இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 20, 2020 10:25 AM

1. கொரோனா பாதிப்பு எதிரொலியாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடனை திரும்ப செலுத்த அவகாசம் வழங்க மத்திய அரசு பரிசீலனை.

tamil important headlines read here for march 20

2. கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் நாளை மறுநாள் சுய ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

3. கொரோனா எதிரொலி: மார்ச் 22ம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ரத்து - மெட்ரோ நிர்வாகம்

4. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 223ஆக உயர்வு - சுகாதாரத்துறை அமைச்சகம்.

5. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழப்பு. 4 தொழிலாளர்கள் படுகாயம்.

6. கொரோனா பரவ வாய்ப்பு: தமிழக - கேரள எல்லையை மூட உத்தரவு.

7. தமிழகத்தில் நாளை மறுநாள் தனியார் பால் விநியோகம் நிறுத்தம்.

8. மேற்கு வங்கத்தில் ரேஷன் கடைகளில் 6 மாதங்களுக்கு அரிசி இலவசம் - மம்தா அறிவிப்பு.

9. கொரோனா எதிரொலி - முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை.

10. மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ராஜினாமா - நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே விலகல்.

 

Tags : #TAMIL #NEWS #HEADLINES