இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 25, 2020 10:04 AM

1. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறையளித்து காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு.

Headlines for today march 25 in Tamil and read in few minutes

2. கொரோனா தொற்று பாதிப்பால் தமிழகத்தில் முதல் மரணம் - மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு

3. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் தனது ஆன்லைன் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பிளிப்கார்ட் நிறுவனம் அறிவிப்பு.

4. இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

5. 21 நாட்கள் ஊரடங்கை கடைபிடிக்கவில்லை என்றால் 21 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடுவோம் - பிரதமர் மோடி.

6. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 536 ஆக உயர்வு.

7. ரஷ்யாவின் குரில் தீவில் கடுமையான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.5ஆக பதிவு.

8. உலகம் முழுவதும் 4.22 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு.

9. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

10. ஊரடங்கையொட்டி தமிழகத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்.

Tags : #HEADLINES #NEWS