இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 16, 2020 10:28 AM

1. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,500 ஆனது. ஐரோப்பாவில் மட்டும் 2 ஆயிரத்தை தொட்டது உயிரிழப்பு.

tamil important headlines read here for march 16

2. 'கொரோனா போர் - பொறுப்பான குடிமக்களே அரசின் பலம்' எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

3. இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 110 ஆக உயர்வு.

4. மார்ச் 16 (இன்று): பெட்ரோல் விலை ரூ.72.28, டீசல் விலை ரூ.65.71

5. டாஸ்மாக் மற்றும் தனியார் பார்கள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவு.

6. மத்தியப் பிரதேசத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை - சட்டசபை ஒத்திவைப்பு.

7. நிர்பயா வழக்கு - குற்றவாளிகளின் குடும்பத்தினர் கருணைக் கொலை செய்ய கோரிக்கை.

8. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு 10 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவிப்பு.

9. தமிழக சட்டசபைக்கு வந்த எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

10. கொரோனா வைரஸை 'தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக' தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags : #HEADLINES #TAMIL