இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்1. மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு.

2. கொரோனா எதிரொலியால் முதியோர் மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே இருக்க மத்திய அரசு அறிவுரை
3. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர மத்திய அரசு தடை விதிப்பு.
4. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு.
5. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,148 ஆக அதிகரிப்பு.
6. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு -அமைச்கர் விஜயபாஸ்கர்.
7. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
8. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசின் செயல்பாட்டை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
9. நிர்பயா வழக்கில் 4 பேரையும் நாளை தூக்கிலிட தடையில்லை - டெல்லி உயர்நீதிமன்றம்.
10. கொரோனாவால் நாடு முழுவதும் முழு அடைப்பு என சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது.
