இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்1. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு.

2. கொரோனா அறிகுறியால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வெளியே நடமாடினால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு.
3. உணவகங்கள், மளிகைக் கடைகள் நேர வரம்பின்றி நாள் முழுவதும் இயங்க தமிழக அரசு அனுமதி.
4. கொரோனா மூலம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் பண வசூலை நிறுத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு.
5. கொரோனா பரவலை தடுக்க சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டி திருச்சியில் ஒரு ரேஷன் கடையில் புதுவழியில் அதனை செயல்படுத்தியுள்ளனர்.
6. கொரோனா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவுவதில்லை - மத்திய சுகாதார அமைச்சகம்.
7. உஜ்வாலா திட்டத்தின் மூலம் 3 மாதங்களுக்கு இலவச கேஸ் வழங்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
8. இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு.
9. கேரளாவில் புதிதாக 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - கேரள முதல்வர் பினராயி விஜயன்.
10. உலகெங்கிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,025-ஐ எட்டியுள்ளது.
