இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்1. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்வு.

2. மலேசியாவில் சிக்கி தவித்த 113 தமிழர்கள் சென்னை திரும்பினர்.
3. தமிழகத்தின் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு.
4. மத்தியப்பிரதேச முதலமைச்சராக நான்காவது முறையாக பதவியேற்றார் சிவராஜ் சிங் சவுகான்.
5. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு. அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படவுள்ளதாக அறிவிப்பு.
6. பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து 62 விசாரணை கைதிகள் ஜாமினில் விடுவிப்பு.
7. கோவை மத்திய சிறையில் இருந்து ஹீலர் பாஸ்கர் உட்பட 136 கைதிகள் ஜாமீனில் விடுதலை.
8. கேரளாவில் கொரோனாவால் புதிதாக 28 பேர் பாதிப்பு.
9. பெட்ரோல், டீசல், விலை நிலவரம் - பெட்ரோல் லிட்டர் ரூ.72.28-க்கும், டீசல் ரூ.65.71-க்கும் விற்பனை.
10. சென்னையில் இருந்து வந்து திருச்சியில் தவிக்கும் மக்கள். போதிய பேருந்துகள் இல்லை என குற்றச்சாட்டு.
