இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 26, 2020 09:56 AM

1. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்காக இந்தியாவில் தயாராகும் ரயில் பெட்டிகள்.

Today important headlines around the world in Tamil for March 26

2. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

3. டெல்லியில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரிடம் சிகிச்சை பெற்ற மற்ற நோயாளிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

4. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,027 ஆக உயர்ந்தது.

5. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்கென 2 இடங்களில் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு தகவல்.

6. ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி.

7. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

8. குஜராத்தில் கொரோனா வைரஸ் மூலம் பாதித்த 85 வயது மூதாட்டி உயிரிழப்பு.

9. நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.

10. இந்தியாவில் கொரோனா வைரஸ் 'சமூக பரவல்' எனும் அபாய கட்டத்தில் இல்லை - மத்திய சுகாதார அமைச்சகம்.

Tags : #HEADLINES #NEWS