இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 23, 2020 10:33 AM

1. புதுச்சேரியில் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடைகளும் திறந்திருக்கலாம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.

Tamil important headlines for March 23 read here

2. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஜெர்மனியில் இரண்டு நபர்களுக்கு மேல் கூட தடை.

3. திட்டமிட்டபடி 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் - தமிழக அரசு.

4. இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு நேற்று மூன்று பேர் உயிரிழப்பு.

5. நாடு முழுவதும் நடைபெற்ற ஊரடங்கு ஒரு நீண்ட போராட்டத்தின் தொடக்கம் என பிரதமர் மோடி கருத்து.

6. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் மேலும் ஒருவர் அனுமதி.

7. கொரோனா பாதிப்பு காரணமாக வரும் 31 ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடரை புறக்கணிக்க திமுக முடிவு.

8. கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து கனடா விலகல்.

9. முகக்கவசம், சானிடைசர் போன்ற மருத்துவ பாதுகாப்பு பொருட்களை அதிக விலைக்கு விற்றால் குண்டாஸ் சட்டம் பாயும் - தமிழக அரசு அறிவிப்பு.

10. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 89 ஆக உயர்வு.

Tags : #TAMIL NEWS #HEADLINES