இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 25, 2020 08:00 PM

1. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்றால், சமூக விலகலை கடைபிடியுங்கள்  - தமிழிக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்.

Today important headlines news for the day March 25

2. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 600 ஐ தாண்டியது.

3. ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா மூலம் 738 பேர் உயிரிழந்திருப்பது அந்நாட்டினை நிலைகுலைய செய்துள்ளது.

4. நாடு தழுவிய டேட்டா நெருக்கடியை கருத்தில் கொண்டு ஹெச்டி தரத்திலிருந்து எஸ்டி தரத்திற்கு வீடியோக்களை ஒளிபரப்புவதாக அமேசான் பிரைம் அறிவித்துள்ளது.

5. ஒடிசாவில் மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும் என அறிவிப்பு - முதல்வர் நவீன் பட்நாயக்

6. இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

7. அரசு அனுமதியளித்தால் என் வீட்டை தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன் - கமல்ஹாசன்

8. 144 தடை உத்தரவை மீறி , தேவையின்றி வெளியே வருவோரின் இருசக்கர வாகனம் நாளை பறிமுதல் செய்யப்படும்.

9. மகாபாரதப் போர் 18 நாட்கள் நடந்தது, 21 நாட்கள் நடக்கும் இப்போரில் வெல்வதே நம் நோக்கம் - பிரதமர்  மோடி.

10. சென்னையில் 144 தடை உத்தரைவை மீறினால் 6 மாதம் சிறைதண்டனை - சென்னை மாநகராட்சி ஆணையர்.

Tags : #HEADLINES #NEWS