இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 23, 2020 07:11 PM

1. தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு.

Top Tamil news headlines for March 23 evening today

2. தமிழகத்தில் 144 தடை உத்தரவையொட்டி அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் மூட தமிழக முதலமைச்சர் உத்தரவு.

3. ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து நாளை மாலை வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

4. 144 தடை உத்தரவையொட்டி சொந்த ஊர் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்.

5. அமெரிக்காவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 100 பேர் பலி.

6. உலக அளவில் கொரோனாவிற்கு 15,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

7. கடந்த ஒரு மாதங்களில் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள் பொதுவெளியில் சுற்றினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் - தமிழக அரசு எச்சரிக்கை.

8. ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டினர் சுற்றித்திரிந்த பகுதிகளில் தடை உத்தரவு.

9. கொரோனா பரவி வருவதையடுத்து நாளையுடன் தமிழக சட்டப்பேரவை நிறைவுபெறும் - சபாநாயகர் தனபால்.

10. வேலூர் சிஎம்சி, சென்னை அப்பல்லோ ஆகிய மருத்துவமனையில் கொரோனாவிற்கான சோதனை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி.

Tags : #HEADLINES #NEWS #TAMILNADU #INDIA