இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 18, 2020 10:27 AM

1. கொரோனா வைரஸ் எதிரொலியால் தமிழகத்தில் 2,635 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

tamil important headlines read here for march 18

2. உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலால் இறந்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தொட்டது.

3. தமிழகத்தில் 2வது நபருக்கு கொரோனா தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு.

4. இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

5. ரூ. 2000 நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

6. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாளை முதல் கொரோனா பரிசோதனை மையம் செயல்படத்தொடங்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

7. மாநிலங்களவை தேர்தல் - தமிழகத்தில் இருந்து 6 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

8. கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் எனக்கூறி மாட்டு சிறுநீர் விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

9. உத்தரப்பிரதேசத்தில் கொரோனா எதிரொலியாக 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத தேவையில்லை என அம்மாநில அரசு அறிவிப்பு.

10.கொரோனா தொடர்பாக வதந்தி பரப்பி வீடியோ வெளியிட்டவர் மதுரையில் கைது.

 

Tags : #TAMIL #NEWS #HEADLINES