இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 26, 2020 09:19 PM

1. வடகிழக்கு டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, இதுவரை 106 பேர் கைது செய்யப்பட்டு, 18 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

important headlines read here for evening feb 26

2. டெல்லியில் கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் சூழல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

3. திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 505 தங்க காசுகள் கண்டுபிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் வாழை பயிரிட தோண்டியபோது மண்பானை ஒன்றில் தங்க காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

4. மதுரை அருகே 3 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி மக்கள் வாழ்விடமும் கண்டுபிடிப்பு

5. கோடை விடுமுறையையொட்டி, திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்: அமைச்சர், அதிகாரிகளுக்கு பயணிகள் சங்கம் கோரிக்கை.

6. ஜப்பானில் டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் இருந்த 5 தமிழர்கள் உள்பட 163 இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர். கப்பலில் இருந்த 163 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியானதை அடுத்து இந்தியா திரும்புகின்றனர்.

7. ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்த 127 தற்காலிக பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தர்னாவில் ஈடுபட்டுள்ளனர்.

8. கேரளாவில் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் மாணவர் அமைப்புகள் எந்தவிதமான போராட்டங்கள், பேரணிகளை நடத்தத் தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

9. குருவாயூர் கிருஷ்ணன் கோவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தெய்வீக பணியாற்றி வந்த கஜராஜரத்னம் என்ற பத்மனாபன் தனது 84 வது வயதில் இன்று (பிப்.,26) மறைந்தது

`10. 24 போர் ஹெலிகாப்டர்கள்!'- அமெரிக்கா, இந்தியா இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மோடி, டிரம்ப் சந்திப்பில் சந்திப்பின் மூலம் இந்த ஒப்பந்தம் நடந்துள்ளது.

Tags : #HEADLINES