இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்1. கொரோனா அச்சம் காரணமாக நாமக்கலில் 10 கோடி முட்டைகள் தேக்கம்.
2. பூந்தமல்லி அரசு சுகாதார மையத்தில் 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு.
3. மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர தடை.
4. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சென்னை வணிகப்பகுதிகளில் உள்ள பெரிய கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு.
5. நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரிய முகேஷின் மனு தள்ளுபடி.
6. கொரோனா எதிரொலி: புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.
7. மத்திய பிரதேசம் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக, முதல்வர் மற்றும் சபாநாயகர் 24 மணி நேரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
8. கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அனைவரும் மாஸ்க் அணிய தேவையில்லை என்று சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
9. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமனம். இவர், ராமர் கோயில் வழக்கு, ரஃபேல் விமான பேரம், சபரிமலை உள்ளிட்ட வழக்குகளில் முக்கிய தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
10. ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் ரூ.10-இல் இருந்து ரூ.50-ஆக அதிகரிப்பு. தென்னக ரயில்வே அறிவிப்பு.