'சடலத்தை 7 பாகங்களாக பிரித்து.. 2 சூட்கேஸில் அடைத்து'... கோவையை உலுக்கிய கொலைச் சம்பவம்.. 'பரபரப்பு தீர்ப்பு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 26, 2019 09:43 PM

2013- ஆம் ஆண்டு கோவை அருகே உள்ள அவிநாசியில் 54 வயதாகியிருந்த சரோஜினி என்பவர் நகைக்காக கொல்லப்பட்டு துண்டாக வெட்டப்பட்டார். அவரது சடலம் 7 பாகங்களாக 2 சூட்கேஸில் அடைக்கப்பட்டு பரண் மீது கிடந்தது. மேலும் அந்த சூட்கேஸ் மீது சிமெண்ட் பூசப்பட்டதோடு, தொடைப்பகுதி சூட்கேஸுக்குள் நுழையாததால், பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்டிருந்தது.

TN Youth who killed coimbatore woman is sentenced to death

நாளடைவில் சடலத்தின் நாற்றம் அக்கம் பக்கத்தினருக்கு வீச, விஷயம் கசிந்தது, சரோஜினியின் உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப் பட்டது. இதில் திருநெல்வேலியைச் சேர்ந்த 33 வயதான யாசர் அராஃபத் கைது செய்யப்பட்டார்.

ஓய்வுபெற்ற கணவர், மகன், மருமகள், 4 வயது பேரக் குழந்தை என மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த சரோஜினியை 12 பவுன் நகைக்காக கொன்ற யாசரின் வழக்கு கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்துக்கு இன்று மீண்டும் வந்தது. இதில் யாசர் அராஃபத்துக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பளித்துள்ளார்.

மட்டுமல்லாமல், தடயங்களை மறைத்தது, நகை திருடியது உள்ளிட்ட குற்றங்களுக்காக 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கோவையை உலுக்கிய இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags : #MURDER #COIMBATORE #VERDICT