பட்டப்பகல்ல துப்பாக்கிச்சூடு.. 'தலையில' குண்டோட 'நடுரோட்ல' ஓடுன பிசினஸ்மேன்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Sep 25, 2019 12:51 PM

டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் இளைஞர் ஒருவர் கார்மேல் ஏறி நின்று, காருக்கு உள்ளிருக்கும் பிசினஸ்மேன் ஒருவரை துப்பாக்கியால் சுடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Businessman was shot dead outside his office in Delhi

அந்த வீடியோவில் சாலையில் கார்கள் வரிசையாக நிற்க ஹெல்மெட் அணிந்திருக்கும் இளைஞர் ஒருவர் காருக்குள் இருக்கும் பிசினஸ்மேனை நோக்கி சரமாரியாக சுடுகிறார்.இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.தொடர்ந்து அந்த பிசினஸ்மேன் காருக்குள் இருந்து இறங்கி தலையில் துப்பாக்கி குண்டுடன் நடுரோட்டில் ஓடுகிறார்.

ஆனாலும் அந்த இளைஞர் அவரை விடாமல் துரத்தி சுடுகிறார்.இந்த தாக்குதலில் பிசினஸ்மேன் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.நடுரோட்ல இப்படி செய்றாங்க?போலீஸ் என்ன செய்யுது? என பலரும் இந்த வீடியோ குறித்து தங்கள் ஆதங்கங்களை பகிர்ந்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.