ஆமா! என் 'கண்ணு' முன்னால தான் 'கொன்னாங்க'..உலகை உலுக்கிய 'கொலை'..உண்மையை ஒப்புக்கொண்ட இளவரசர்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Sep 26, 2019 03:17 PM

சவுதி அரசரையும்,இளவரசர் முகமது பின் சுல்தானையும் தொடர்ந்து விமர்சனம் செய்து எழுதிவந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கசோகி கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி விவாகரத்து தொடர்பான ஆவணங்களைப் பெற,சவுதி தூதரகத்துக்குள் சென்றார்.துருக்கியில் உள்ள தனது காதலியை திருமணம் செய்யும் பொருட்டு அவர் துருக்கி நாட்டில் உள்ள சவுதி தூதரகத்துக்கு சென்றார்.மீண்டும் அக்டோபர் 2-ம் தேதி வருமாறு அவரிடம் அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

Khashoggi murder \'happened under my watch\': Saudi prince

தொடர்ந்து அக்டோபர் 2-ம் தேதி சவுதி தூதரகத்துக்குள் சென்ற ஜமால் அதற்குப்பின் மீண்டும் வெளியில் வரவில்லை.இது உலக அரங்கில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சவுதிக்கு, அமெரிக்கா பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை. இதைத்தொடர்ந்து ஜமால் கொலை செய்யப்பட்டதாக துருக்கி அரசு செய்தி வெளியிட,சவுதி அரசு அதனை ஒப்புக்கொண்டது.ரியாத்தில் இருந்து 15 பேர் கொண்ட ஸ்பெஷல் டீம் ஒன்று இஸ்தான்புல்லுக்கு சென்று அவரைத் துண்டு,துண்டாக வெட்டிக் கொலை செய்த உண்மையும் வெளியாகி உலக அரங்கை அதிர வைத்தது.

இதைத்தொடர்ந்து குற்றவாளிகளைத் தப்ப விடமாட்டோம் என, துருக்கி அதிபர் எண்டோகன் தெரிவித்தார்.இந்த கொலை விவகாரத்தில் சவுதி இளவரசரை அமெரிக்கா நேரடியாகவே குற்றம் சாட்டியது.மேலும் `ஜமால் கொலையில் ஈடுபட்ட 18 முதல் 21 பேருக்கு அமெரிக்க விசா இனி வழங்கப்படமாட்டாது' என்று அதிபர்  டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார்.

இந்தநிலையில் சரியாக 1 வருடங்களுக்கு பின் பத்திரிகையாளர் ஜமால் கொலை எனது கண்முன்னால் தான் நடந்தது என சவுதி இளவரசர் முகமது பின் சுல்தான் ஒப்புக்கொண்டுள்ளார்.மத்திய கிழக்கு நாடுகளுக்கான Frontline என்னும்  பத்திரிக்கை சமீபத்தில் சவுதி இளவரசரை பேட்டி கண்டது.அப்போது,'' ஜமால் கசோகி கொலை என் கண்முன் தான் நடைபெற்றது.இந்த கொலையில் எனக்கு எல்லா பொறுப்பும் உள்ளது.எனினும் இந்த கொலை என் கவனத்திற்கு வராமல் நடைபெற்ற ஒன்று,''என தெரிவித்துள்ளார்.

உலகை உலுக்கிய பத்திரிகையாளர் கொலை விவகாரம் குறித்து,சுமார் 1 ஆண்டுக்குப்பின் சவுதி இளவரசர் ஒப்புக்கொண்டுள்ளது உலக நாடுகளை பரபரப்பாக்கி உள்ளது.இந்த பேட்டியின் முழுமையான வீடியோ அக்டோபர் 1-ம் தேதி இரவு 8 மணிக்கு PBS என்னும் ஆப் வாயிலாக வெளியிடப்படும் என Frontline பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

Tags : #MURDER #SAUDIARABIA #JAMALKHASHOGGI