கொஞ்ச நாள் யாரும் 'வேலைக்கு' வரவேணாம்...'பிரபல' நிறுவனம் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 26, 2019 09:39 PM

இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் மிகப்பெரிய நிறுவனங்களும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.அந்த வகையில் சென்னை எண்ணூரில் அமைந்துள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது.இதனால் அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு வேலையில்லா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களை அறிவித்து வருகிறது.

Ashok Leyland declares 5 day holiday for Ennore Plant

இந்நிலையில் அந்நிறுவனம் மீண்டும் ஊழியர்களுக்கு வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது.அதன்படி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக வரும் 28-ம் தேதி அக்டோபர் 1,8,9 ஆகிய தேதிகளில் வேலை நடைபெறாது.அதேபோல செப்டம்பர் 30-ம் தேதியை ஏற்கனவே வேலையில்லா நாளாக அறிவித்து இருந்தோம்.

அந்த நாட்களில் வேலை நடைபெறாது.ஊழியர்கள் யாரும் வேலைக்கு வர வேண்டாம்.மேற்கண்ட நாட்களில் சம்பளம் கொடுப்பது தொடர்பாக ஊழியர் சங்கத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,''என தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மாதம் 12 நாட்கள் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வேலைகள் நிறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #VADACHENNAI #ASHOKLEYLAND