'உல்லாச' வாழ்க்கை..ரூபாய் 40 லட்சம்+காருடன் டிரைவர் ஓட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 22, 2019 11:15 PM

உல்லாச வாழ்க்கை நடத்த வேண்டும் என ஆசைப்பட்டு,ரூபாய் 40 லட்சம் பணத்துடன் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

Car Driver Run with Rs.40 Lakhs in Coimbatore, Arrested

கடந்த 4-ம் தேதி கோவை நீலிக்கோணம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தன்னுடைய தோட்டத்தை விற்று சுமார் 40 லட்ச ரூபாய் பணத்துடன் காரில் வீடு திரும்பியிருக்கிறார்.பணப்பையை எடுத்து வருமாறு டிரைவர் கிஷோரிடம் சொல்லிவிட்டு பழனிச்சாமி வீட்டிற்குள் செல்ல,டிரைவர் கிஷோர் கண் இமைக்கும் நேரத்திற்குள் காருடன் சேர்த்து பணப்பையையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி போலீசில் புகார் அளிக்க,அவர்கள் டிரைவர் கிஷோரைத் தேடி ஒருவழியாக தற்போது அவரைக் கைது செய்துள்ளனர்.திருடிய உடன் ஈரோட்டை சேர்ந்த தனது நண்பர் கலைச்செல்வனுடன் சேர்ந்து பெங்களூர், புதுச்சேரி என பல நகரங்களுக்கும் சென்று பணத்தை ஜாலியாக கிஷோர் செலவு செய்த விவரம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கிஷோர் செலவு செய்த தொகை போக மீதமுள்ள 35 லட்ச ரூபாய் பணம்,நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக கிஷோர் இவ்வாறு பணத்தை செலவு செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்து இருக்கிறார்.

Tags : #COIMBATORE #DRIVER