‘கண் இமைக்கும் நேரத்தில்’... ‘பைக்கில் சென்ற’... ‘நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 23, 2019 01:44 PM

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து  மோதிய விபத்தில், பாலிடெக்னிக் மாணவர் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

government bus and two wheeler got accident in panruti

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீரபெருமாள் நல்லூர் புதுகாலனியை சேர்ந்தவர் காசி. இவரது மகன் சிவகண்டன் (22). பெங்களூருவில் காய்கறி வியாபாரம் செய்துவந்த இவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவருபவர்கள் சந்துரு (19) மற்றும் அஜித் (19). நண்பர்களான இவர்கள் மூவரும், கடந்த செவ்வாய்கிழமை அன்று மாலை, சிவகண்டனின் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் அடிக்கச் சென்றுள்ளனர்.

பெட்ரோல் அடித்துவிட்டு, 3 பேரும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தநிலையில், பெட்ரோல் பங்க் அருகே சாலையை கடக்க முயற்சித்தனர். அப்போது பண்ருட்டியில் இருந்து பாலூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து, இவர்களது இருசக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில் சிவகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த மாணவர்களான அஜித் மற்றும் சந்துரு படுகாயம் அடைந்தனர்.

இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அதில்,  அஜித் என்ற மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு நண்பரான சந்துருவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #ACCIDENT #PANRUTI #GOVERNMENT #BUS #FRIENDS