‘காரில் சென்றபோது’... ‘ஒரு நொடியில்’... ‘நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 22, 2019 10:51 AM

ஊத்துக்குளி அருகே லாரி மீது, கார் மோதியதில் நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

car and lorry met accident near salem one died, one critical

திருவண்ணாமலை மாவட்டம் போலூரைச் சேர்ந்தவர் பழனி (32). கலசபாக்கம் செங்கம்புத்தூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (34). நண்பர்களான இவர்கள் இருவரும், காரில் கோவை சென்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து, கோவை-சேலம் பைபாஸ் சாலை வழியாக திருவண்ணாமலைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது காரை பழனி ஓட்டி வந்தார். அவருக்கு அருகில் உள்ள முன்சீட்டு இருக்கையில் நண்பர் செல்வராஜ் அமர்ந்து இருந்தார்.

கோவை-சேலம் பைபாஸ் சாலையில், ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அவர்களுடைய காருக்கு முன்னால் கோவையில் இருந்து சேலம் நோக்கி, லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார். லாரியின் பின்பக்கத்தில் மோதியது. மோதிய வேகத்தில், காரின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் ஓட்டுநர் இருக்கையில் இருந்த பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பலத்த காயம் அடைந்த செல்வராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஊத்துக்குளி போலீசார், பழனியின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #COIMBATORE #SALEM #BYPASS #ROAD