‘தொடர் மழை, மேகமூட்டம்’... ‘30 அடி பள்ளத்தில்’... ‘விளிம்பில் போய் நின்ற அரசுப் பேருந்து’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Oct 22, 2019 06:15 PM
உதகை அருகே தொடர் மழையால் ஏற்பட்டுள்ள மேக மூட்டம் காரணமாக, 30 அடி பள்ளத்தின் விளிம்பில் அரசுப் பேருந்து இறங்கிய சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலைப்பகுதியான இங்கு மழையால் பல்வேறு இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், குன்னூர் மலைப்பாதையில் 25 பயணிகளுடன் உதகை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், காட்டேரி பகுதி அருகே, எதிரே வந்த லாரிக்கு வழி கொடுக்க, இடது புறம் ஓரமாக அரசுப் பேருந்து ஓட்டுநர் இயக்கினார்.
அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, 30 அடி பள்ளத்தின் விளிம்பில் அரசுப் பேருந்து இறங்கியது. இதனால் பயணிகள் பதறிப்போயினர். ஓட்டுனரின் சாமர்த்தியத்தால், பயணிகள் யாருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.