கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை..! எந்தெந்த மாவட்டங்கள்..? விவரம் உள்ளே..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 22, 2019 08:41 AM

கனமழை காரணமாக தமிழகத்துள்ள சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TamilNadu School, College leave due to heavy rain

தென்மேற்கு வங்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மழையானது அடுத்த் 3 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்துள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (22.10.2019) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் நேற்று உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், சேலம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags : #SCHOOLSTUDENT #CLIMATE #WEATHER #COLLEGESTUDENTS #TAMILNADU #TNRAINS #CHENNAIRAINS #SCHOOL #LEAVE