‘இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி கோர விபத்து’.. ‘பள்ளிக்குக் கிளம்பிய சிறுவனுக்கு வழியில் நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 18, 2019 08:15 PM

திருத்தணி அருகே தனியார் பள்ளி வாகனம் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Thiruvallur School Student died in Bike Bus Accident near Chennai

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த முஸ்லிம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசாருதீன் (15). திருத்தணி அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த இவர் இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு தனது நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பிச் சென்றுள்ளார்.

ம.பொ.சி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த பள்ளி பேருந்து ஒன்று அவர்கள்மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் அசாருதீன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அசாருதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #THIRUVALLUR #CHENNAI #SCHOOL #BUS #BIKE #STUDENT #BOY #DEAD #ACCIDENT