திடீர் ‘ஹாட் அட்டாக்’.. ஸ்கூல் ப்ரேயரில் சுருண்டு விழுந்த 1ம் வகுப்பு மாணவி..! சோகத்தில் மூழ்கிய பள்ளி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Oct 16, 2019 05:35 PM
பள்ளியில் நடைபெற்ற ப்ரேயரின் போது 1ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வைஷ்ணவி என்ற மாணவி 1ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை பள்ளியில் நடைபெற்ற வழிப்பாட்டு கூட்டத்தில் (Prayer) அவர் பங்கேற்றுள்ளார். அப்போது திடீரென வைஷ்ணவி மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் ஆசிரியர்கள் மாணவியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்த மாணவியின் பெற்றோர், சிறுமி இதய நோயினால் பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்காக சிறுமி சிகிச்சை பெற்றுவந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மாரடைப்பால் 1ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சக மாணவிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
