4-ம் வகுப்பு மாணவிக்கு சக மாணவர்களால் நடந்த கொடுமை..! கோவையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 08, 2019 01:23 PM

கோவையில் 4 -ம் வகுப்பு மாணவி தாக்கப்பட்டது தொடர்பாக சக மாணவர்கள் மீது மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4th std students attack their class girl complaint filed in Coimbatore

கோவை மாவட்டம் மீனா எஸ்டேட் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பயிலும் 4 -ம் வகுப்பு மாணவியை சக மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மாணவியில் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவியின் தந்தை பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் மாணவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவி தாக்கப்பட்டது தொடர்பாக பீளமேடு காவல் நிலையத்தியத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார். மேலும் தனது மகளின் மருத்துவ அறிக்கை மற்றும் மாணவர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரை மீடியாக்களிடம் மாணவியின் தந்தை காண்பித்துள்ளார். சக மாணவர்களால் தாக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 4 -ம் வகுப்பு மாணவி தாக்கப்பட்டது தொடர்பாக சக மாணவர்கள் மீது மாணவி தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #COIMBATORE #STUDENTS #ATTACK #COMPLAINT #SCHOOL