'ஸ்கூல் கேண்டின்களில்'... 'இதையெல்லாம் விற்கக் கூடாது'... 'மத்திய அரசு கொண்டுவரும் புதிய தடை'... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 06, 2019 09:25 PM

மாணவர்களின் உடல் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு புதிய திட்டத்தை அமல்படுத்துகிறது.

banning on junk and fast foods in and around the schools

குழந்தைகளிடம் நொறுக்குத் தீனி சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக, சிறு வயதிலேயே உடல்ரீதியான குறைபாடுகளும், மனரீதியிலான பாதிப்புகளும் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவித்து வகின்றன. இந்நிலையில், பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணவு வழங்குவது தொடர்பாக, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத் துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘பள்ளிகளில் உள்ள கேன்டீன்களில், உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், நொறுக்குத் தீனிகளை விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதிக கொழுப்பு, காரம், அதிக உப்பு அல்லது இனிப்பு நிறைந்த உணவுகள், கேடு விளைவிக்க கூடியது. எனவே நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் கேண்டீன்களில் நொறுக்குத்தீனி விற்கவும், அது தொடர்பான விளம்பர பதாகைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் பள்ளிகளைச் சுற்றி 50 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளிலும், இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். மாணவர்களின் நலனை பேணும் வகையில், அனைத்து பள்ளிகளும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மாணவர்கள் எந்த மாதிரியான உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுகிறார்கள், அது தரமானதா என்பதை ஆய்வுசெய்ய, பள்ளி நிர்வாகம் தனிக் குழுக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தங்களது வளாகத்தில் உள்ள கேன்டீன்களில் என்னென்ன உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பன போன்ற விவரங்களை, மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத் துறைக்கு பள்ளி நிர்வாகங்கள் அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : #JUNK #FOOD #FAST #SCHOOL #CANTEEN