‘இனி பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு’.. ‘ பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 22, 2019 05:13 PM

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

School Public Exam Time Extended TN Minister Sengottaiyan

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தற்போது 2.30 மணி நேரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிய பாடத்திட்டத்தால் தேர்வெழுத இந்த நேரம் போதவில்லை என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து நடப்பு ஆண்டிலிருந்து பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “மாணவர்களின் கோரிக்கையை ஏற்று 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்படும்” எனக் கூறியுள்ளார். இதன்மூலம் இனி மாணவர்கள் இனி 3 மணி நேரம் பொதுத்தேர்வுகளை எழுதுவார்கள்.

Tags : #TAMILNADU #SCHOOL #PUBLIC #EXAM #TIME #EXTENDED #MINISTER #SENGOTTAIYAN