‘கட்டிபுடி வைத்தியம்’ ‘காதலியை கொல்ல துப்பாக்கி’.. பள்ளியை பரபரக்க வைத்த இளைஞர்..! வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்By Selvakumar | Oct 21, 2019 11:46 AM
அமெரிக்காவில் தோழியை கொல்வதற்காக வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் வந்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமெரிக்கா ஒரேகான் மாகாணத்தில் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அப்பள்ளிக்குள் துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் வேகமாக நுழைவதைக் கண்ட கால்பந்தாட்ட பயிற்சியாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது அந்த இளைஞர் வகுப்பறை ஒன்றுக்குள் நுழைந்துள்ளார். உடனே அந்த நபரின் துப்பாக்கியை பறிக்க முயன்று தோல்வியடைகிறார். அந்த சமயம் வகுப்பறைக்குள் இருந்து வந்த பெண் ஒருவர் துப்பாக்கியுடன் இருந்த இளைஞரை கட்டியணைத்து சமாதனப்படுத்துகிறார். அப்போது சாதூர்யமாக கால்பந்தாட்ட பயிற்சியாளர் இளைஞரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துள்ளார்.
இதனை அடுத்து இளைஞரிடம் நடத்திய விசாரணையில், அவர் அப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தனது தோழியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இருவரும் பிரிந்ததால், அவரைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் வந்ததாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த செயலுக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இளைஞர் துப்பாக்கியுடன் வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
