'இந்த 2 பெண் ஊழியர்கள்தான் பொறுப்பு'.. 'என் மகள பாத்துக்கங்க'.. பஸ் பணிமனை ஊழியரின் தற்கொலைக் கடிதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 09, 2019 04:56 PM

சக பெண் ஊழியர்கள் துன்புறுத்தியதால், போக்குவரத்து பணிமனையில் பணிபுரிந்து வந்த பெண்மணி தற்கொலை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் ராமநாதபுரத்தில் நேர்ந்துள்ளது.

woman commits suicide and leaves a heart breaking letter

ராமநாதபுரம் காட்டூரணியைச் சேர்ந்தவர் ஷோபனா.  இவர் அப்பகுதியில் இன்று காலை குடிநீருக்காகத் தோண்டப்பட்ட ஊரணியில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தை அறிந்தவுடன் அங்கு விரைந்த தீயணைப்புத் துறை போலீஸார் அவரை சடலாமாக மீட்டனர். பின்னர் போலீஸார் ஷோபனாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே தற்கொலைக்கு முன்னதாக ஷோபனா எழுதிய கடிதம் ஒன்று போலீஸாருக்கு கிடைத்தது. அதில், ராமநாதபுரம் புறநகர் பேருந்து பணிமனையில் பணிபுரிந்து வந்த ஷோபனாவை அவருடைய சக பெண் ஊழியர்களான பானுமதி மற்றும் கமலா ஆகியோர் ஷோபனாவிடம் அடிக்கடி தகராறு வளர்த்து வந்ததாகவும், பல பணியாளர்கள் முன்னிலையும் அவரை தரக்குறைவாக பேசியதாகவும், ஆபாசமாக திட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அந்த கடிதத்தில் தனது ஏடிஎம் அட்டையின் ரகசிய எண் மற்றும் தான் நகைகளை வைத்திருக்கும் இடங்களையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஷோபனா, தனது மகளை பார்த்துக்கொள்ளுமாறும் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : #SUICIDEATTEMPT #RAMANATHAPURAM #BUS #DEPOT #TNTRANSPORTATION