'தமிழக அரசின் சின்னத்தை எங்க பதிச்சிருக்காங்க'... 'சர்ச்சையாகும் டைல்ஸ்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jun 05, 2019 10:47 PM

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கழிப்பறைக‌ளில், ‌தமிழக அரசின் சின்னம் பொறித்த டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tiles with images of the tn logo plastered on the walls of the toilets

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான இலவச கழிவறைகள் கட்டிகொடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தர்ஷா பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பில் 508 கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் இச்சாவாரி என்ற கிராமத்தில் கட்டப்பட்டுள்ள 13 கழிவறைகளில், மகாத்மா காந்தி, தேசியக்கொடியில் உள்ள தேசிய சின்னமான அசோக சக்கரம் மற்றும் தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் ஆகியவை பொறிக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் உடனடியாக டைல்ஸ்களை  உடைத்து எடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கிராம வளர்ச்சித்துறை அதிகாரி சந்தோஷ்குமார் என்பவரை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதுடன், விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் சின்னம் கொண்ட டைல்ஸ்கள் உத்தரப் பிரதேசம் வரை சென்றது எப்படி என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Tags : #NATIONALEMBLEM #TAMILNADU #TILES