‘கிங்’கோலி ஏன் பாஸ் கோவப்படுத்துறீங்..! ஆக்ரோஷப்படுற அளவுக்கு யாரோட விக்கெட்டா இருக்கும்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 05, 2019 09:52 PM

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்க அணி 227 ரன்களுக்கு சுருண்டது.

WATCH: Chahal castles Der Dussen with a stunning delivery

இங்கிலாந்து சவுதாம்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தது.

இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் புவனேஷ்வர்குமார் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். மைதானம் சுழற்பந்து சாதகமாக இருந்ததால் சஹால் மற்றும் குல்திப்பின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இதில் குல்தீப் 1 விக்கெட்டும், சஹால் 4 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க கேப்டன் டு ப்ளிஸிஸ் மற்றும் டேர் டஷனை அடுத்தடுத்து போல்ட் செய்து சஹால் அசத்தினார்.

Tags : #ICCWORLDCUP2019 #VIRATKOHLI #INDVSA #TEAMINDIA #VIRATKOHLI #CWC19