பணம்,நகை...குடுத்தது உண்மைதான்...அந்தர் 'பல்டியடித்த' வினிதா!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 26, 2019 06:50 PM

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் வினிதா(20).இவரின் கணவர் ஆரோக்கிய லியோ(25) சிங்கப்பூரில் வேலை செய்துவந்த லியோ சமீபத்தில் ஊருக்கு வந்துள்ளார்.அப்போது வினிதா டிக் டாக் வழியாக அபி என்ற பெண்ணுடன் நெருங்கிப் பழகுவதாக சந்தேகப்பட்ட,அவர் வினிதாவை அவரது அம்மா வீட்டில் கொண்டு விட்டுள்ளார்.

Tik Tok Girl Vinitha Revealed the Truth in Police

தொடர்ந்து 50 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு வினிதா அங்கிருந்து ஓடிவிட்டதாக லியோவும், வினிதாவின் தாயாரும் போலீசில் புகார் அளித்தனர்.இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சிவகங்கை போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து ஆஜரானார்.அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

முதலில் தான் பணம் எடுத்துக்கொண்டு ஓடவில்லை என சொன்ன வினிதா, தொடர்ந்து போலீசாரின் கிடுக்குப்பிடியில் விசாரணையில் மாட்டிக்கொண்டார். அப்போது,''பணம்,நகைகளை தோழியிடம் கொடுத்தது உண்மைதான்.டிக் டாக் மோகத்தால் இவ்வாறு செய்துவிட்டேன்.நர்ஸிங் படித்துள்ளேன்.இனிமேல் வேலைக்கு போக முயற்சி செய்கிறேன்,''என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வழக்கை விசாரித்து வரும் போலீசார் கூறுகையில்,''வினிதாவின் தோழியிடம் இருந்து நகைகளை மீட்க முயற்சி செய்து வருகிறோம்.விரைவில் மீது அவரிடம் ஒப்படைப்போம்.பெண் காவலர்கள் மூலம் வினிதாவுக்கு ஆலோசனை வழங்கினோம்.விரைவில் வேலைக்கு செல்ல முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்,''என்றனர்.

முன்னதாக தனது கணவரின் சந்தேகம் தான் காரணம்.இதனால் அவரிடம் இருந்து விவாகரத்து செய்யப்போகிறேன் என சொன்ன வினிதா,தற்போது உண்மையை ஒத்து கொண்டிருக்கிறார்.வினிதாவின் தாய் அருள் ஜெயராணி இனிமேல் டிக் டாக் பயன்படுத்த வேண்டாம் என அவரிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Tags : #POLICE #TIKTOK