'வீட்டைவிட்டு ஓடுனதுக்கு'..புருஷன் தான் காரணம்.. இனி அவரோட வாழ மாட்டேன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Sep 25, 2019 11:03 AM
டிக் டாக் மூலம் அறிமுகமான பெண் தோழியுடன் வீட்டைவிட்டு ஓடிப்போனதாக சொல்லப்படும் வினிதா தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி தன்னுடைய தரப்பு விளக்கத்தையும் வினிதா அளித்திருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் வினிதா(20).இவரின் கணவர் ஆரோக்கிய லியோ(25) சிங்கப்பூரில் வேலை செய்துவந்த லியோ சமீபத்தில் ஊருக்கு வந்துள்ளார்.அப்போது வினிதா டிக் டாக் வழியாக அபி என்ற பெண்ணுடன் நெருங்கிப் பழகுவதாக சந்தேகப்பட்ட அவர் வினிதாவை அவரது அம்மா வீட்டில் கொண்டு விட்டுள்ளார்.
ஆனால் 50 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு வினிதா அங்கிருந்து ஓடிவிட்டதாக லியோ போலீசில் புகார் அளித்தார்.இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் காணாமல் போனதாக சொல்லப்படும் வினிதா நேற்று மாலை சிவகங்கை போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து ஆஜரானார்.அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
@news7tamil pic.twitter.com/nroyDbWNV0
— Thamizhan (@Adaingappa) September 24, 2019
அதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களை வினிதா சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,''கல்யாணத்தப்போ எனக்கு போட்ட நகைகளை அடகு வச்சுத்தான் என் புருஷனை வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சேன்.அபிக்கும் எனக்கும் டிக் டாக் வழியா பழக்கம் ஏற்பட்டுச்சு.இது என் கணவருக்கும் தெரியும்.சிங்கப்பூர்ல இருந்த என் புருஷன் கடந்த 18-ம் தேதி திடீர்னு வீட்டுக்கு வந்தாரு.ஏன் திடீர்னு வந்தீங்கன்னு கேட்டேன் அவர் என்ன சந்தேகப்பட்டு அடிச்சாரு.இதுனால என் கால்,கண்ல காயம் ஏற்பட்டுச்சு.அதுக்கு அப்புறம் நான் வீட்டைவிட்டு வெளியேறி கரூர்ல இருக்க சரண்யாங்கிற பிரெண்ட் வீட்டுக்கு போனேன்.
நான் நகையை எடுத்துக்கிட்டு டிக் டாக் தோழி கூட ஓடுனதா டிவி பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன். சரண்யாவோட ஆலோசனையின் பேர்ல நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேர்ல வந்து நடந்த உண்மைகளை சொன்னேன்.இந்த செய்தியால என் டிக் டாக் பிரெண்ட் அபிக்கு எதுவும் பிரச்சினை ஏற்படக்கூடாதுன்னு தான் நான் போலீஸ் ஸ்டேஷன் வந்தேன்.அவங்க சொல்ற மாதிரி 50 சவரன் நகையெல்லாம் எடுத்துக்கிட்டு போகல.6 பவுன் சங்கிலி,ஒரு பிரேஸ்லெட் இது ரெண்டும் தான் நான் எடுத்துட்டு போனேன்.நான் இனிமே என் புருஷன் கூட வாழமாட்டேன்.எனக்கு டைவர்ஸ் வேணும்.என்னப்பத்தி தப்பான தகவல்களை சொன்னதுக்கு,என் அம்மா-புருஷன் ரெண்டு பேரும் மன்னிப்பு கேட்கணும்,''என்றார்.
மேலும் இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் வினிதா வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
