'இதெல்லாம் தப்பில்ல'..தோழியை 'திருமணம்' செய்ய.. பெண்ணுக்கு உதவிய போலீஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Sep 25, 2019 06:47 PM

தனது கல்லூரி தோழியை திருமணம் செய்ய விரும்பிய பெண்ணுக்கு,போலீசார் உதவி செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Rajasthan Police Supports Lesbian Marriage, Details Here

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் கல்லூரி படித்து வந்த இரு தோழிகள் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.இவர்கள் நட்பை இருவரது வீட்டிலும் தவறாக நினைக்கவில்லை.சில வருடங்களாக நல்ல தோழிகளாக இருந்த இருவரும் ஆண்களுடன் அதிகம் பேசி,பழகியதில்லை.நன்றாகவும் படித்ததால் இருவரது வீட்டிலும் இவர்கள் நட்பை பெருமையாக கருதியுள்ளனர்.

நாளடைவில் தோழிகளின் நெருக்கம் மிகவும் அதிகமாகவே,பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு இருவரையும் விசாரித்துள்ளனர்.அப்போது நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என இருவரும் தெரிவித்துள்ளனர்.இதனை ஏற்றுக்கொள்ள முடியாத பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

ஆனால் போலீசார் சட்டமே இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது என்று இருவரின் பெற்றோர்களிடமும் எடுத்துக் கூறினர்.தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இரண்டு பெண்களும் போலீசாரிடம் கேட்க,போலீசாரும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.இதைத்தொடர்ந்து பெண்கள் இருவரும் தனியாக வீடு எடுத்து வசிக்கத் துவங்கியுள்ளனர்.

Tags : #POLICE #LESBIAN