'இந்த கோலத்துல உன்ன பாக்கவா சென்னைக்கு அனுப்புனேன்'...'கதறிய தாய்'...ஹெச்.ஆர் இறந்தது எப்படி?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 21, 2019 04:33 PM

வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Reason behind Chennai IT HR Death

திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் ஜூலியஸ். இவருடைய மனைவி சாந்தி. பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஜூலியஸுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் திருமணமாகி பெங்களுருவில் வசித்து வருகிறார்.  இரண்டாவது மகளான தனிதா ஜூலியஸ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேலைக்காகச் சென்னைக்கு வந்துள்ளார். முதலில் வடபழனியில் வேலை பார்த்த அவர், பின்பு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

இதனிடையே அம்பத்தூரில் வேலைக்கு சேர்ந்த முதல் நாள் அன்று, தனது அலுவலகம் இருக்கும் 2-வது தளத்திலிருந்து 9-வது தளத்தில் உள்ள உணவகத்துக்குப் படி வழியாக ஏறிச் சென்றுள்ளார். அப்போது 8-வது மாடியிலிருந்து அவர் கீழே விழுந்துள்ளார். தனிதாவின் உடல் கிடந்த இடத்தில் அவர் காலில் அணிந்திருந்த ஒரு ஷூ கிடந்தது. இன்னொரு ஷூ, 8-வது மாடியில் இருந்தது.

இதுதொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரிகள் ''தனிதா கீழே விழுந்ததில் கை, கால்கள் மற்றும் உடலில் உள்ள எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளன. தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது பிரதே பரிசோதையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. மேலும் தனிதா இறப்பதற்கு முன்பு அவருடைய அப்பாவுடன் வாட்ஸ்அப்பில் சேட்டிங்  செய்ததை ஜூலியஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதில் புதிய வேலை குறித்தும், குடும்ப நிலவரம் குறித்தும் பேசியதாக ஜூலியஸ் கூறியுள்ளார். மேலும் இறப்பதற்கு முன் அவர் யார், யாருடன் பேசினார் என்பது குறித்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளார்கள். இதற்கிடையே தனிதா சற்று பருமனாக காணப்பட்டதால் தனது உடல் ஏடையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பெரும்பாலும் மாடிகளில் ஏறுவதற்கு லிப்ட்டை பயன்படுத்தாமல் மாடிப் படிகளையே பயன்படுத்தி வந்துள்ளார். அதுவும் அவரது உயிரிழப்பிற்கு காரணமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தனிதாவின் அப்பா ஜூலியஸ் காவல்துறையில் தெரிவித்த தகவலின் அடிப்படையில், ''தனிதா தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோளை அல்ல எனவும், அவரை நான் அப்படி வளர்க்கவில்லை'' எனவும் உணர்ச்சிபொங்க கூறியுள்ளார். அவரது கூற்றிற்கு வலுசேர்க்கும் விதமாக, தனிதாவின் ஒரு ஷூ 8-வது மாடியிலும் இன்னொரு ஷூ அவரின் உடலுக்கு அருகிலும் இருந்து காவல்துறையினர் மீட்டுள்ளார்கள்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தனிதா தன்னுடைய இருக்கையிலிருந்து தனிதா எழுந்து செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.  ஆனால், மாடிப்படி பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் அங்கு தனிதா சென்ற காட்சிகள் பதிவாகவில்லை. இதற்கிடையே தனிதா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை எனவும், அவர் தவறி விழுந்துதான் இறந்திருக்க வேண்டும் என காவல்துறையினர் கூறியுள்ளார்கள். இருப்பினும் முழுமையான விசாரணை முடிந்த பிறகு தான் தனிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மங்கள் வெளிப்படும் என தெரிகிறது.

முன்னதாக இறுதி சடங்கிற்காக திருச்சிக்கு தனிதாவின் உடலை பார்த்து  ''உன்னை இந்த நிலைமையில் பார்க்கவா சென்னைக்கு அனுப்பி வைத்தேன்''  என அவரது தாய் கதறி அழுதது அங்கிருந்தகர்களை கலங்க செய்தது.

Tags : #SUICIDEATTEMPT #POLICE #TAMILNADUPOLICE #HR #IT PARK #DEATH