'என் தங்கச்சி கிட்டயா இப்படி பண்ற?'.. 'போலீஸ்காரர் மகளுக்கு'.. 'அக்காள் கொடுத்த நூதன யோசனை!'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Sep 19, 2019 05:18 PM

மும்பையில் சட்டப்படிப்பு பயின்று வரும் போலீஸ்காரர் ஒருவரின் மகளுக்கு கடந்த ஒரு மாத காலமாக செல்போனில் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி வந்த இளைஞருக்கு சரமாரியாக அடி உதை விழுந்துள்ளது.

youth disturbing police daughter, people assaulted him

மும்பை போரிவிலியைச் சேர்ந்த போலீஸ்காரரின் மகளுக்கு இதுபோன்று நடந்ததை அடுத்து, அந்த பெண் தனது அக்காவிடம் கூறியுள்ளார். தன் தங்கையின் நிலையை உணர்ந்த அக்கா, மீண்டும் அந்த வாலிபர் தன் தங்கைக்கு போன் செய்தபோது, நயமாக பேசி, காந்திவிலி மேற்கு மகாவீர் நகர் அருகில் இருக்கும் பூங்காவுக்கு வரச் சொல்லியிருக்கிறர்.

அந்த இளைஞரும், இதனை நம்பி அங்கு வர, இளம் பெண்ணோ  தனது அக்காவுடன் சென்றுள்ளார். அங்கு காத்துக்கொண்டிருந்த வாலிபரைப் பார்த்து இளம் பெண்ணின் அக்கா சரமாரியாகக் கேள்வி கேட்டு திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்பதிலுக்கு அக்காள், தங்கை இருவரையுமே ஆபாசமாகத் திட்டியுள்ளார்.

இதை கவனித்த சுற்றத்தில் இருந்த மக்கள், இளைஞர் வரம்பு மீறியதை கண்டித்துள்ளனர். ஆனாலும் இளைஞர் அதிகம் வாய் பேசியதால், அவரை அங்கிருந்த மக்கள் அடித்து, உதைத்ததொடு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து 24 வயதான நிதின் பன்சால் எனும் பெயர் கொண்ட அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரை அடித்தவர்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : #MUMBAI #WOMAN #POLICE #YOUNGSTER