'மனைவி' உடைமாற்றும் வீடியோ..தெனமும் வந்ததால 'ஷாக்கான' கணவன்..இப்படியும் ஒரு வில்லனா?
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Sep 26, 2019 12:26 PM
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார்.அவருடைய மொபைலுக்கு தினசரி அவரது மனைவியின் உடைமாற்றும் வீடியோக்கள் சென்றுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனைவி மற்றும் வீட்டு உறுப்பினர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடியுள்ளனர்.ஆனால் வீட்டில் கேமரா மறைத்து வைத்ததற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை.எனினும் அவரது கணவர் மொபைலுக்கு வீடியோக்கள் செல்வது நிற்கவில்லை.இதைத்தொடர்ந்து கோழிக்கோடு போலீசாரிடம் புகார் அளிக்க,அவர்கள் வந்து வீடு முழுவதும் தேடியும் கேமரா எங்கிருக்கிறது என கண்டறிய முடியவில்லை.
ஒரு கட்டத்தில் சைபர்கிரைம் போலீசாரிடம் இந்த வழக்கு சென்றுள்ளது.அவர்கள் வந்து வீட்டை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.கணவரின் மொபைலுக்கு செல்லும் வீடியோக்கள் எந்த கோணத்தில் படம் பிடிக்கப்படுகிறது என விசாரித்துள்ளனர்.அந்த தகவலை வைத்து வீட்டை ஆராய்ந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அவர்கள் வீட்டின் ஸ்மார்ட் டிவிதான் அந்த வில்லன்.
விடுமுறைக்கு வந்த கணவன்-மனைவிக்கு ஸ்மார்ட் டிவி வாங்கிக்கொடுக்க,வீட்டு பெட்ரூமில் இருந்த ஸ்மார்ட் டிவி வழியாக கணவன்-மனைவி இருவரும் தினசரி சாட் செய்துள்ளனர்.தொடர்ந்து டிவியில் நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு மனைவி தூங்க செல்வது வழக்கம்.ஆனால் டிவியை சுவிட்ச் ஆப் செய்தாலும் அதில் உள்ள கேமரா எப்போதும் ஆனில் இருந்து மனைவியின் உடைமாற்றும் காட்சிகளை கணவன் மொபைலுக்கு அனுப்பி வைத்துள்ளது.இதைத்தொடர்ந்து இதுபோன்ற நவீன சாதனங்களை கையாளும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை என சைபர்கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
கடந்த 1 மாதத்தில் மட்டும் கேரளாவில் சுமார் 200 வழக்குகள் இதுபோல பதியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.எனவே நவீன சாதனங்களை கையாளும்போது எச்சரிக்கையுடன் இருங்க மக்களே!