'கண்டிப்பா' ஜெயிக்கிறேன்..பெண் 'அதிகாரியை' கட்டிப்பிடித்து 'திடீர்' முத்தம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Sep 22, 2019 10:14 PM

பந்தயம் கட்டி பெண் அதிகாரிக்கு இளைஞர் முத்தம் கொடுத்த சம்பவம்,சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Puducherry Drunk Youth Misbehaving Women,Arrested

போதையில் எதையாவது செய்து பின்னர் ஜெயிலுக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.அந்த வகையில் புதுச்சேரி இளைஞர் ஒருவர் நண்பரிடம் பந்தயம் கட்டி,ரோட்டில் நடந்து சென்ற பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த 23 வயது பெண் அதிகாரி ஒருவர் கடந்த வியாழக்கிழமை இரவு பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.அப்போது அவருக்குப்பின் பைக்கில் 2 இளைஞர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் திடீரென பைக்கில் இருந்து இறங்கி அவருக்கு முத்தம் கொடுத்து விட்டு ஓடிவிட்டார்.

அந்த நேரத்தில் தெருவில் ஆளில்லாததால் அந்த பெண் கூச்சல் போட்டும் உதவிக்கு யாரும் வரவில்லை. தொடர்ந்து புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு வாட்ஸ் அப் வழியாக அந்த பெண் தகவல் தெரிவிக்க,அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அந்த இளைஞரைப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் ரிஷி என்பதும் அவர் மெட்டத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.அன்றிரவு இவரும் இன்னொரு வாலிபரும் தண்ணியடித்து விட்டு பைக்கில் வந்துள்ளனர். அப்போது அந்த இன்னொரு வாலிபர் இந்த பெண்ணைக்காட்டி அவருக்கு உன்னால் முத்தம் கொடுக்க முடியுமா? என சவால் விட்டுள்ளார்.இதனால் பந்தயத்தில் ஜெயிப்பதற்காக ரிஷி பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்திருக்கிறார்.

பந்தயத்தில் ஜெயித்த ரிஷி தற்போது போலீஸ் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.இதுபோன்ற குற்றங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்,அப்போது தான் இதுபோன்ற குற்றங்கள் உடனடியாக தடுக்கப்படும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

 

Tags : #POLICE #KISS