'நாங்க சொல்ற இடத்துக்கு வந்தா'... 'தனிமையில இருக்கலாம்'...'ஆப் மூலம் மொபைலுக்கு வந்த மெசேஜ்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Sep 20, 2019 01:56 PM
மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டர் பாலியல் தொழில் தற்போது சிறு நகரங்களிலும் தங்களது வலையை விரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் மதுரையில் காவலருக்கே ஆபாச மெசேஜ் அனுப்பிய கும்பல் தற்போது சிக்கியுள்ளது.
மதுரையில் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவின் காவலராக பணியாற்றி வருபவர் பழனிகுமார். இவரது எண்ணிற்கு LOCANTO App மூலம் பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டுமா என்று ஆசை வார்த்தை கூறி மெசேஜ் ஒன்று வந்தது. அதோடு விருப்பம் இருந்தால் இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் என ஒரு எண்ணும் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த கும்பலை பிடிக்க நினைத்த காவலர் பழனிக்குமார், வாடிக்கையாளர் போல அந்த கும்பலிடம் பேசியுள்ளார்.
அவர்களும் அதை நம்பி அனைத்து தகவல்களையும் புட்டு புட்டு வைத்துள்ளார்கள். மேலும் ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் ரூபாய் என்றும், ஒரு இரவுக்கு 12 ஆயிரம் ரூபாய் எனக் கூறியுள்ளனர். பின்னர் சக போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு, பாலியல் கும்பல் சொன்ன இடத்திற்கு பழனிகுமார் சென்றுள்ளார். அங்கு அய்யனார், சேகர், மனோஜ்குமார், நந்தினி உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் இருந்துள்ளது. அவர்கள் பழனிகுமாரிடம், நீங்கள் வந்த தகவலை யாரிடமும் கூற கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் மறைந்திருந்த காவல்துறையினர் அந்த நான்கு பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே காவலரையே உல்லாசத்துக்கு கூப்பிட்ட சம்பவம், மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.