VIDEO: விக்கெட் கீப்பருனு 'அவர' சொன்னீங்க... திடீர்னு 'இவரு' வந்து நிக்கிறாரு... ரசிகர்கள் கேள்வி?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலி தலைமையில் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. அதன்படி முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 12.20 மணிக்கு தொடங்கவுள்ளது.

உலகக்கோப்பை தோல்விக்குப்பின் இந்திய அணி, நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் இன்று சந்திப்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கே.எல்.ராகுல் கிளவுஸ் அணிந்து விக்கெட் கீப்பிங் செய்வது போன்ற வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
Getting your keeping gloves ready @klrahul11? 👐👌🏻😃 #TeamIndia #NZvIND 🇮🇳🇳🇿 pic.twitter.com/g3EnlmdsWV
— BCCI (@BCCI) January 23, 2020
இதைப்பார்த்த ரசிகர்கள் ரிஷப் பண்டை விக்கெட் கீப்பராக அறிவித்து விட்டு தற்போது ராகுல் கீப்பிங் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறீர்கள்? உண்மையிலேயே விக்கெட் கீப்பிங் செய்யப்போவது யார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். வேறு சில ரசிகர்கள் ராகுல், பண்டுக்கு வாய்ப்புகள் அளிப்பது போல சஞ்சு சாம்சனுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
