எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென கழன்று விழுந்த ‘மிடில் பெர்த்’.. தூங்கிக்கொண்டிருந்த முதியவருக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 21, 2020 02:54 PM

நாகர்கோவில் விரைவு ரயிலில் மிடில் பெர்த் கழன்று முதியவர் மேல் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nagercoil express middle berth fall down One injured

தாம்பரத்தில் இருந்து நேற்றிரவு நாகர்கோவில் விரைவு ரயில் புறப்பட்டு சென்றுள்ளது. இந்த ரயிலின் S10 பெட்டியின் தர்மராஜ் என்பவர் பயணம் செய்துள்ளார். தனக்கான லோயர் பெர்த்தில் தர்மராஜ் படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவு திடீரென மிடில் பெர்த் கழன்று தூங்கிக்கொண்டிருந்த தர்மராஜ் மீது விழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் தர்மராஜ் மற்றும் மற்றொரு பயணியையும் மீட்டுள்ளனர். அப்போது தர்மராஜுக்கு முதலுதவி அளிக்க ரயிலில் எவரும் இல்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து உடைந்த மிடில் பெர்த்தை மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் சரிசெய்ய முயன்றுள்ளனர். இதனை அடுத்து சுமார் அரை மணிநேர காலதாமதத்துக்கு பின்னர் மதுரையில் இருந்து ரயில் புறப்பட்டு சென்றது. சில தினங்களுக்கு முன்பு ரயில் ஜன்னல் விழுந்து பெண் பயணியின் விரல்கள் துண்டானது. அப்போது ரயிலில் முதலுதவு பெட்டி இல்லாததால் மயிலாடுதுறை தனியார் மருத்துமனையில் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரயில் பெட்டிகள் அனைத்திலும் முதலுதவி பெட்டி வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : #ACCIDENT #TRAINACCIDENT #MADURAI #NAGERCOILEXPRESS