மனைவியுடன் 'தகாத' உறவு.. ஆத்திரத்தில்.. நண்பனின் 'தங்கை-கணவனை' கொன்ற வாலிபர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 15, 2019 08:45 PM

நாமக்கல் மாவட்டம் காமராஜ் நகரை சேர்ந்தவர் விமல்ராஜ். இவருக்கு அனிதா என்ற மனைவியும் 7 மாத பெண் குழந்தையும் உள்ளது. நேற்றிரவு விமல்ராஜ், அனிதா, அனிதாவின் தந்தை கருப்பசாமி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த கும்பல் மூவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் அனிதா, விமல்ராஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

Couple murder in Namakkal Police starts investigation

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த விமல்ராஜ்-அனிதா உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கருப்பசாமியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறந்த அனிதாவின் அண்ணன்அருணும், நிக்கல்சன் என்பவரும் நண்பர்கள். அருண் கோவையில் எலெக்ட்ரிக் காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார்.அருணுக்கும், நிக்கல்சனின் மனைவிக்கும் இடையே உறவுக்கு மீறிய தொடர்பு இருந்துள்ளது. இதை நிக்கல்சன் கண்டித்துள்ளார். ஆனாலும் அருண் தனது உறவை விடவில்லை. சமீபத்தில் நிக்கல்சனின் மனைவியை ஒருவாரமாக காணவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நிக்கல்சன், அருணிடம் போன் செய்து என் மனைவி எங்கே? என்று கேட்டிருக்கிறார்.

இதையடுத்து அருண் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் அவரது தந்தை கருப்பசாமி, அனிதா, அனிதாவின் கணவர் ஆகியோரை வெட்டி சாய்த்துள்ளனர். தற்போது கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நாமக்கல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #MURDER